info@isl.lk
(094) 377 395 390
About Us Services Products

தொற்று நீக்கி கூடம் / தொற்று நீக்கி சாவடி / தொற்று நீக்கி பாதை (Disinfection Chamber )

 தொற்று நீக்கி கூடம் /  தொற்று நீக்கி சாவடி / தொற்று நீக்கி பாதை (Disinfection Chamber ) .

 

இன்றைய சூழ்நிலையில் நாம் அறிந்திருப்பது யாதெனில் தனிநபர்கள்  நிறுவனங்கள் COVID 19 பரவலுக்கு எதிராக போராட பல்வேறு அமைப்புகளை நாட்டில் உருவாக்குகின்றனர். அவற்றுள் பிரபலமான  திட்டங்களில் ஒன்று தொற்று  நீக்கி கூடம் /  தொற்று நீக்கி சாவடி / தொற்று நீக்கி  பாதை ஆகும்.

இத் திட்டத்தின் முக்கிய பிரச்சினை, உரிய தேவையான நோக்கத்தை நிறைவேற்றாமையே. மூடப்பட்ட அறையில் தொற்று நீக்கிகளை மனிதர்கள் மீது தெளிப்பதனால்  கிருமிகள் அழியும் என்பதற்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  குறித்த மேற்பரப்புகளை தொற்று நீக்குவதற்கான  பொதுவான நடைமுறையே 20-30 விநாடிகளுக்கு குறித்த மேற்பரப்பை  முழுமையாக அமிழ்த்துவது அல்லது மூடுவது ஆகும் . மேற்குறித்த தொற்று நீக்க முறையால் உடல் முழுமையும் தொற்று நீக்கப்படும் என்பது மிகவும் கேள்விக்குரியது. ஆல்கஹால் (IPA / எத்தனொல்) துடைப்பான்களும் அதே பொறி-முறையிலேயே செயல்படுகின்றன. இருப்பினும் மேலே பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி மைக்ரோ துளிகளின் உண்மையான தொடர்பு நேரம் மற்றும் முழு மேற்பரப்பையும் உள்ளடக்கல் தொடர்பாக தெளிவாக ஆய்வு செய்யப்படவில்லை.  இந்த வைரஸ் பரவுவதற்கான  முக்கிய பகுதிகளாக கைகள் மற்றும் முகம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆகவே, இந்த அறை வழியாகச் சென்று கைகளை முழுமையாக கிருமி நீக்கம் செய்யாது இருப்பது (சவர்க்காரம் உபயோகித்து கழுவுதல் / கை-துப்புரவு செய்தல்) தவறான பாதுகாப்பு உணர்வை வழங்கும்.

இளம் கண்டுபிடிப்பாளர்களின் யோசனைகளையோ முயற்சிகளையோ குறைத்து மதிப்பிடுவதற்கான எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேற்கூறப்பட்ட இத் திட்டமானது முற்றுமுழுதாக பொறியியல், நுண்ணுயிரியல் மற்றும் சுகாதார அம்சங்களின் அடிப்படையிலான தொழில்நுட்ப அணுகுமுறையாகும்.

 இந்த வகை அமைப்பு ஆல்கஹால் (ஐபிஏ / எத்தனால்), சோடியம் ஹைப்போ குளோரைடு (NaOCl / HOCl) ஓசோனேட்டட் வாட்டர், ஹேண்ட் வாஷ் லிக்விட், ஆகியவற்றை  தெளிக்கும் போது துகள்கள் 10 - 60  வினாடிகளுக்கு மூடப்பட்ட அறையினுள் உருவாக்கப்படுகிறது. மேற்பரப்புகளில் தெளித்தல் பெரிய அளவிலான புகார்களை உருவாக்குதல், அல்லது உட்புற வெளிப்புற தொற்று நீக்கிகளை உபயோகித்தல், வைரஸை அழிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் தொற்று நீக்கி  தெளித்தல் அல்லது புகார்களை உருவாக்குவதால், நோய்க்கிருமிகள் மேலும் பரவலடைதல், தோல் எரிச்சல் ஏற்படல் ரசாயனங்களை உள்ளிழுப்பதால் ஏற்படும் சுவாச பக்கவிளைவுகள்  மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடவும்  வழிவகுக்கும்.

ஆல்கஹால் / ஐபிஏ போன்றவற்றை தெளிக்கும் திரவமாகப் பயன்படுத்தப்படுத்தும்போது, அதிக அளவு ஐசோபிரைல் ஆல்கஹாலினை உள்ளிழுப்பதனால்  குமட்டல், வாந்தி, மற்றும் மூக்கு  எரிச்சல், தொண்டை எரிச்சல் இருமல்  போன்றவற்றால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். நம் உடல் சிறிய அளவு ஐசோபிரைல் ஆல்கஹால் ( IPA ) கையாள முடியும் என்பதால். உடலில் IPA இன் அளவை கல்லீரல் நிர்வகிக்க முடியாதபோது  IPA விஷமாக மாறுகின்றது.  சிறுநீரகங்கள் எமது உடலில் இருந்து சுமார் 20 - 50 சதவீதம் வரையான  IPA வையே  நீக்குகின்றன. மீதமுள்ளவை ஆல்கஹால் டீஹைட்ரஜனேஸ்கள் எனப்படும் நொதிகளால் அசிட்டோனாக உடைக்கப்படுகின்றன. இந்த அசிட்டோன் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஊடாகவே எமது உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. ஐசோபிரைல் ஆல்கஹால் IPA இலகுவில் எரியக்கூடியது, இதனால் எளிதில் பற்றவைக்க முடியும். ஆவி நிலையில்உள்ள IPA காற்றோடு கலந்து வெடிக்கும் கலவைகளை உருவாக்கக்கூடும். ஐசோபிரைல் ஆல்கஹாலினை வெப்பம், தீப்பொறிகள், தீப்பிழம்புகள் மற்றும் பிற பற்றவைப்பு மூலங்களிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். எனவே, மக்கள் IPA இனைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். IPA ஒரு நல்ல தொற்று நீக்கி என்று எல்லோரும் நினைக்கிறார்கள், ஆனால் பொறுப்பற்ற பயன்பாட்டின் விளைவுகளைப் பற்றி மக்கள் உணரவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் IPA இனைப் பயன்படுத்தினால் ஓசோனுக்கும் பாதிப்பை  ஏற்படும்.

இந்த அறையில் சோடியம் ஹைப்போகுளோரைட் பயன்படுத்தப்படும்போது, ஹைபோகுளோரைட்டின் நச்சுத்தன்மை அதன் ஆக்ஸிஜனேற்ற திறன் மற்றும் கரைசலின் pH இல் தங்கியுள்ளது.   தோலுடன் தொடர்பு கொள்ளும்போது அதன்  அரிக்கும் செயல்பாட்டினால் நச்சுத்தன்மை ஏற்படுகின்றது. உட்கொள்ளவதைத் தொடர்ந்து வரும் அம்சங்கள்: சிறிய தற்செயலான உட்கொள்ளல்கள் மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க நச்சுத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், அதிக அளவில் உட்கொள்ளும் போது அரிப்பு காரணமாக இரைப்பை  குடல் காயம் மற்றும்  குருதியில்  அமிலத்தன்மை, சோடியம்,  குளோரைட் என்பவற்றின் அதிகரிப்பு,   உள்ளிட்ட  விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தோலுடன் தொடர்பு கொள்ளும் போது வெளிப்படும் அம்சங்கள்: நீடித்த அல்லது அதிகளவு தோல் மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும் போது  தோல் எரிச்சல் மற்றும் சருமத்திற்கு சேதம் அல்லது தோல் அழற்சிக்கு காரணமாக இருக்கலாம். இத்தகைய எதிர் விளைவுகள் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ ஏற்படலாம். அதிக செறிவான கரைசலைப் பயன்படுத்தும் போது கடுமையான இரசாயன தீக்காயங்கள் தோலில் ஏற்படலாம். சுவாசத்துடன் உள்ளெடுப்பதால் தொடர்ந்து வரும் அம்சங்கள்: இது தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அறிந்திருப்பினும் , ஹைபோகுளோரைட்டை மட்டும் உள்ளிழுப்பது மேல் சுவாசப்பாதைகளில் லேசான எரிச்சலைத் தவிர வேறொரு விளைவையும் ஏற்படுத்துவதில்லை. NaOCl கண்களுடன் தொடர்பு கொண்டால் கண்களில்  எரிவு மற்றும் வலி ஏற்படும். கண்களில் உள்ள இயற்கையான ஈரப்பதம் திரவ ப்ளீச்சுடன் இணைந்து ஒரு அமிலத்தை உருவாக்குகிறது.

 கோவிட் -19 நோய் பரவலின்போது அதற்கான முன்னேற்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டலின் படி ஏப்ரல் 17, 2020 அன்று சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான இயக்குனரால் வெளியிடப்பட்ட  இடைக்கால வழிகாட்டல் அறிக்கையின் 8 ஆம் பக்கத்தில் தொற்று நீக்கி அறைகள் பரிந்துரைக்கப்படவில்லை என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழிமுறை பரிந்துரைக்கப் படவில்லையாயினும், பல பொது இடங்கள், தொழிற்சாலைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை  மக்களை கிருமி நீக்கம் செய்வதற்காக இந்த அமைப்பை நிறுவுகின்றன . எனவே இந்த அமைப்பின் பயனற்ற தன்மையையும், இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கருத்திற் கொண்டு, தொழிற்சாலைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொது போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட பொது இடங்களில் இந்த முறையை தடை செய்யுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

Document Prepared by :

·         Rushanth Chandrabose B.Sc Chemical Engineer

Technical Director , Industrial Solutions Lanka (pvt) Ltd)

Visiting Lecturer University of Jaffna

·         Poorna Vidanage  B.Sc Chemical Engineer

o   (PhD Candidate  at Nanyang Technological University-Singapore)

·         Malki Ranasinghe MSc (Microbiology) Microbiologist/ABC aqua science